Tamil Bible study

இதழ்:2456 கரம் பிடித்து நடத்துவது அவர் செயல்!

எபி:11:31 “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம்என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால்,  விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் உலகத்தை மறுதலித்தல்… Continue reading இதழ்:2456 கரம் பிடித்து நடத்துவது அவர் செயல்!

Tamil Bible study

இதழ்:2455 எங்கிருந்து வருகிறது உன் சக்தி?

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” நான் என்னுடைய 13 ம் வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், பள்ளியிலும், கல்லூரியிலும் அநேக காரியங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தது. ஒரு கை மாறி மறு கைக்கு இரகசியமாய் மாற்றப்பட்ட கதை புத்தகங்களை மறுதலித்தது, கும்பலாய் டிக்கட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற நண்பர்களோடு போக மறுதலித்தது, சிற்றின்பமான காரியங்களை பேசி சிரிக்கும் நண்பர்களைத் தவிர்ப்பது,    இப்படி பல… Continue reading இதழ்:2455 எங்கிருந்து வருகிறது உன் சக்தி?

Tamil Bible study

இதழ்:2454 எந்த சேதமும் உன்னை அணுகாது!

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” யோசுவா:24:17 ”..நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே.” என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது வெளியில் எந்த விதமான பழ ரசமும் வாங்கமாட்டேன். வீட்டிலேயே பழங்களை வாங்கி அதை ஜூஸ் போட்டு வைப்பேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கருப்பு திராட்சை கிரஷ் பண்ணுவது! கடினமான வேலைதான் ஆனாலும்… Continue reading இதழ்:2454 எந்த சேதமும் உன்னை அணுகாது!

Tamil Bible study

இதழ்:2453 ஒருநாள் ஆரம்பித்து மறைந்து விடும் வாழ்க்கையல்ல!

“விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” (எபி:11:31) டெலிவிஷன் வந்த புதிதில் நாம் அதற்கு அன்டெனா பொருத்த வேண்டியதிருந்தது அல்லவா? உங்களில் பலர் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்! எங்களுடைய முதல் கருப்பு வெள்ளை டிவியை என்னால் மறக்கவே முடியாத ஒன்று! சில நேரங்களில் காற்று பலமாக வீசினால் அன்டெனா ஒருபக்கம் சற்று திரும்பிவிடும், நமக்கு படம் சரியாக வராது. அப்படிப்பட்ட நேரங்களில் எங்கள் வீட்டில், எங்களில் ஒருவர் மாடி… Continue reading இதழ்:2453 ஒருநாள் ஆரம்பித்து மறைந்து விடும் வாழ்க்கையல்ல!

Tamil Bible study

இதழ்:2452 காணப்படாதவைகளை விசுவாசிக்கக் கிருபை தாரும்!

யோசு:2:11 “……உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்.” சில வருடங்களுக்கு முன்னர், நான் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த போது உலக பொருளாதார நிலைமையால் எங்கள் கம்பெனியின் ஏற்றுமதி மிகவும் குறைவுபட்டது. அநேக தொழிலாளர்கள் இருந்ததால் வேலையை நிறுத்தமுடியாமல் தொடர்ந்துவந்தோம். நாங்கள் தயாரித்த ஆடைகள் குவிய ஆரம்பித்தது. ஒரு வருடம் எப்படியோ சமாளித்து விட்டேன், அடுத்த வருடம்  என்னால் கம்பெனியில் வேலை செய்தவர்களின் ஊதியம், பராமரிப்பு இவற்றை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னுடைய உடல்நிலை… Continue reading இதழ்:2452 காணப்படாதவைகளை விசுவாசிக்கக் கிருபை தாரும்!

Tamil Bible study

இதழ்:2451 இரக்கமும், அன்பும் காட்டத் தவறி விடாதே!

யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.” சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ  எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால்… Continue reading இதழ்:2451 இரக்கமும், அன்பும் காட்டத் தவறி விடாதே!

Tamil Bible study

இதழ்:2450 உம்மை அறிய கிருபை தாரும்!

யோசுவா: 2:9  ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்” யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து,  அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம். ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது. இந்த… Continue reading இதழ்:2450 உம்மை அறிய கிருபை தாரும்!

Tamil Bible study

இதழ்:2449 Wishing you all a very Blessed New Year 2026!

யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான். உலகமெங்கும் இந்த தினசரி தியானத்தைத் தவறாமல் வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இந்தப் புதிய ஆண்டு ஒரு பெரிய ஆசீர்வாதமான ஆண்டாக மலர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். தேவன் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் தடையில்லாமல் நம்மை வந்தடைய அவருடைய கரத்துக்குள் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்! நாம் ராகாபைப்… Continue reading இதழ்:2449 Wishing you all a very Blessed New Year 2026!

Tamil Bible study

இதழ்:2448 இன்னும் ஒரு தருணம்!

யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம்… Continue reading இதழ்:2448 இன்னும் ஒரு தருணம்!